வியாழன், 11 டிசம்பர், 2014

பிறர் குறையை ஆராயாதீர்!

பிறர் குறையை ஆராயாதீர்!


وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ ( 1 الهمزة)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ، ابو داود
நம்மிடம்  ஏற்படும் தீய வழக்கங்களில் முக்கியமான ஒன்று பிறர் குறைகளை அலசி ஆராய்வதாகும்.
எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் குறைகளுடனே நடமாடுகிறார்கள். நூறு வீதம் சரியான மனிதராக ஒருவரை இவ்வுலகில் காண்பது அபூர்வம்.
எம்மிடையே பல குறைகளை வைத்துக் கொண்டே பிறரைப் பற்றி விமர்சிப்பது எவ்வகையில் முறையாகும்?
அப்படியென்றால், நாம் பிறரது குறைகளை கண்ட இடத்திலும், நின்ற இடத்திலும் பேசிக் கொண்டிருப்பது தவறான விசயமாகும்.
முகநூலில் உலாவிக்கொண்டிருக்கும் புதிய தத்துவம்
உலகில் மிக எளிமையானது....
பிறரிடம் குறை காண்பது 
உலகிலேயே மிகக் கடினமானது 
தன் குறையை தானே உணர்வது...
இதை ஆமோதிக்கும் நிலையில் தான் பலரது நடைமுறை இருக்கிறது.
ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.
அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம்.

தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.
வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,

"
பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?" என்று கேட்டார்.

"
ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன்.

பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார். சமமாக இருந்தது.
        பிறர் குறைகளை துறுவி ஆராய்வது சமூக ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் என்பதால் இஸ்லாம் அதை முற்றாக தடுக்கிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا  
“எவருடைய குறைகளையும் நீங்கள் துருவித் துருவி விசாரித்துக்கொண்டிருக்க வேண்டாம்.”(49 : 12)
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ ( 1 الهمزة)
عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُؤْذُوا عِبَادَ اللَّهِ، وَلَا تُعَيِّرُوهُمْ، وَلَا تَطْلُبُوا عَوْرَاتِهِمْ؛ فَإِنَّهُ مَنْ طَلَبَ عَوْرَةَ أَخِيهِ الْمُسْلِمِ طَلَبَ اللَّهُ عَوْرَتَهُ حَتَّى يَفْضَحَهُ فِي بَيْتِهِ» احمد 22402
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.'' (முஸ்னத் அஹ்மத்)
عن كعب الأحبار أنه قال أصاب الناس قحط شديد على عهد موسى رسول الله صلى الله عليه وسلم فخرج موسى ببني إسرائيل يستسقي بهم فلم يسقوا حتى خرج ثلاث مرات ولم يسقوا فأوحى الله عز وجل إلى موسى عليه السلام إني لا أستجيب لك ولا لمن معك وفيكم نمام فقال موسى يا رب ومن هو حتى نخرجه من بيننا فأوحى الله عز وجل إليه يا موسى أنهاكم عن النميمة وأكون نماماً فقال موسى لبني إسرائيل توبوا إلى ربكم بأجمعكم عن النميمة فتابوا فأرسل الله تعالى عليهم الغيث احياء علوم الدين
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُبَلِّغُنِي أَحَدٌ مِنْ أَصْحَابِي عَنْ أَحَدٍ شَيْئًا، فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْكُمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ» ابو داود 4860
عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ: أُتِيَ ابْنُ مَسْعُودٍ فَقِيلَ هَذَا فُلَانٌ تَقْطُرُ لِحْيَتُهُ خَمْرًا، فَقَالَ عَبْدُ اللَّهِ: «إِنَّا قَدْ نُهِينَا عَنِ التَّجَسُّسِ وَلَكِنْ إِنْ يَظْهَرْ لَنَا شَيْءٌ نَأْخُذْ بِهِ» ابو داود 4890
 இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களிடம் ஒரு மனிதர் இழுத்துக் கொண்டு வரப்பட்டார். இழுத்து வந்தவர்கள், ''இவருடைய தாடியிலிருந்து மது சொட்டுகிறது'' என்று கூறினார்கள். இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் ''நிச்சயமாக நாங்கள் குற்றங்களை துருவித்துருவி ஆராய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளோம். எனினும் ஏதேனும் தவறுகள் வெளிப்பட்டால் நாங்கள் தண்டிப்போம்'' என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ، ابو داود
கண்ணாடிக்கு ஒப்பிட்டதில் பல பாடம் இருக்கிறது.
·       ஒழிவு மறைவின்றி தெரிவிப்பது.
·       தன்பக்கம் முதல் கவனம்
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُبْصِرُ أَحَدُكُمُ  الْقَذَاةَ فِي عَيْنِ أَخِيهِ، وَيَنْسَى الْجِذْعَ فِي عَيْنِهِ» صحيح ابن حبان
மற்றவர்களை சுட்டிக்காட்டும் போது அதிகமான விரல்கள் நம்மை நோக்கி இருப்பதை மறந்து விடுகிறோம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحِبُّوا الْفُقَرَاءَ وَجَالِسُوهُمْ وَأَحِبَّ الْعَرَبَ مِنْ قَلْبِكَ وَلْتَرُدَّ عَنِ النَّاسِ مَا تَعْلَمُ مِنْ قَلْبِكَ المستدرك علي الصحيحين
سَمِعْتُ ذَا النُّونِ يَقُولُ: " مَنْ نَظَرَ فِي عُيُوبِ النَّاسِ عَمِيَ عَنْ عُيُوبِ نَفْسِهِ
·       உரியவரிடம் சுட்டிக்காட்ட வேண்டும் கண்ணாடிபோல
·       குறை சுட்டிக்காட்டப்பட்ல் கோபம் கொள்ளாமல் ஏற்க வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ مسلم


الجمع والترتيب محمد يوسف الداودي


ودكري

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக