செவ்வாய், 17 நவம்பர், 2015

முஸிலிம் இளைஞர்களே! உங்களுடன் சில நிமிடங்கள்...

بسم الله الرحمن الرحيم
முஸிலிம் இளைஞர்களே! உங்களுடன் சில நிமிடங்கள்...
اَللهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ [الروم: 54]
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْمَارُ أُمَّتِي مَا بَيْنَ السِّتِّينَ إِلَى السَّبْعِينَ، وَأَقَلُّهُمْ مَنْ يَجُوزُ ذَلِكَ»سنن الترمذي
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இளைஞர்கள்தான் ஒரு சமுதாயத்தின் உயிர்நாடி, முதுகெலும்பு. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம், மேம்பாடு என்பது இளைஞர்களின் முன்னேற்றம், மேம்பாடு ஆகியவற்றில்தான் தங்கி இருக்கிறது.
இளைஞர்கள் சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பி அதன் தலைமைத்துவத்தை சுமக்கப் போகின்றவர்களாக இருக்கின்றார்கள்.
அதனால்தான் எந்த ஒரு சமுதாயத்திலும் இளைஞர்கள் முக்கியத்துவப்படுத்தி நோக்கப்படுகிறார்கள். 
ஆனால் இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கும் பயன்படுவதில்லை என்பதையும் தாண்டி இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

எது இளமைப்பருவம்?
சிறுபிராயம், வயோதிகம் எனும் இரு பலவீனங்களுக்கிடையில் உள்ள ஒரு பலமான பருவமே வாலிபம்.
اَللهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ [الروم: 54]
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ  [النور: 59 ]
عَنْ عَلِيٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:" رُفِعَ القَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَشِبَّ، وَعَنِ المَعْتُوهِ حَتَّى يَعْقِلَ سنن الترمذي
மேலுள்ள வசனம் மற்றும் ஹதீஸிலிருந்து, பருவ வயதை அடைந்ததிலிருந்தே வாலிபம் துவங்கி விடுகிறது என்பதை அறியலாம்.
وقيل سن الشباب ومبدؤه بلوغ الحلم. تفسير البيضاوي
والثانية سن الوقوف وهو سن الشباب ونهايته الى ان تتم أربعون سنة من عمره. روح البيان
மேலுள்ள இரு பெருமக்களின் பதிவிலிருந்து வாலிபம் என்பது பருவமடைந்தது முதல் துவங்கி நாற்பதாம் வயதில் நிறைவடைகிறது என்பதை விளங்கலாம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْمَارُ أُمَّتِي مَا بَيْنَ السِّتِّينَ إِلَى السَّبْعِينَ، وَأَقَلُّهُمْ مَنْ يَجُوزُ ذَلِكَ»سنن الترمذي
 المرحلة
السنوات
சதவீதம்
من
إلى
الطفولة
الولادة
الرابعة عشرة
22
الشباب
الخامسة عشرة
الأربعين
40
الكهولة
الحادية والأربعين
الخمسين
15
الشيخوخة
الحادية والخمسين
الوفاة
23

மேலுள்ள அட்டவணை விபரப்படி ஒரு மனிதனுடைய வயது 65 என்று வைத்துக்கொண்டால் அதில் 40% வாலிபமாக கழிகிறது அதாவது ஒட்டு மொத்த வயதில் அதிக காலம் நிலைக்கும் பருவம் வாலிபம் மட்டுமே!
வாலிபம் என்பது இறைவனின் தனிப்பெரும் அருட்கொடை.
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: " اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ , شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ , وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ " شعب الإيمان
     'உனக்கு, ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள் என நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு உபதேசமாக கூறினார்கள்.  அவை:
1. முதுமை வருமுன் இளமைப் பருவத்தையும்.
2. நோய் வருமுன் உடலாரோக்கியத்தையும்.
3. வறுமை வருமுன் செல்வநிலையையும்'
4. அதிக வேலை பழுக்கள் வருமுன் ஓய்வு நேரத்தையும்.
5. மரணம் வருமுன் வாழ்க்கையையும்.
 அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
 நூல்  : ஷுஅபுல் ஈமான்.

வாலிபம் தனிப்பெரும் அருட்கொடை என்பதால்தான் இறைவனின் அருட்கொடைகள் பற்றிய விசாரணையில் ]பொதுவாக வயது பற்றி ஒரு விசாரணை இருந்தும்[ வாலிபம் குறித்தும் தனியொரு விசாரணை  நடைபெறும் என வருகிறது.
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَزُولُ قَدِمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعِ خِصَالٍ: عَنْ عُمُرُهِ فِيمَا أَفْنَاهُ؟ وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلَاهُ؟ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ؟ وَعَنْ عَلِمهِ مَاذَا عَمِلَ فِيهِ؟ " المعجم الكبير للطبراني


'மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவை:
1. தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினான்?
3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்? அதை எவ்வாறு செலவழித்தான்?
4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தான்?
அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரலி) நூல்  : தபரானி.

வாலிபம் தனிப்பெரும் அருட்கொடை என்பதால்தான் இறைவனின் அருளையும் சுகங்களையும் அனுபவிக்கும் சுவனவாசிகள், வாலிபர்களாகவே இருப்பர்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا " فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ} [الأعراف: 43]

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், "(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்; ஒருபோதும் இறக்கமாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்" என்று அறிவிப்புச் செய்வார்.
"இதுதான் சொர்க்கம்; நீங்கள் (உலகில்) நற்செயல் புரிந்துகொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும்" (7:43) என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், கூறுவது அதுதான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 5457. 
இந்த பருவத்தில் செய்யப்படும் அனைத்து நல்ல செயல்களுக்கும் அல்லாஹ்விடம் மிகப்பெரும் வெகுமதிகள் உண்டு.
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "صحيح البخاري 660
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் வளர்ந்த வாலிபர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்" 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 660. 
வாலிபம் பாக்கியமானதுதான், அதேசமயம் ஆபத்தானதும்தான். இந்த பருவத்தில் நிகழும் தீய பழக்கங்களே பெரும்பாலானவர்களுக்கு நிலைப்பெற்று இம்மை மறுமையின் கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் காரணமாகி விடுகிறது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُصْعَبِ بْنِ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ خَالِدِ بْنِ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ زَيْدِ بْنِ خَالِدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الشَّبَابُ شُعْبَةٌ مِنَ الْجُنُونِ، وَالنِّسَاءُ حِبَالَةُ الشَّيْطَانِ»مسند الشهاب واعتلال القلوب للخرائطي ضعيف
عَنْ سَمُرَةَ، قَالَ: سَمِعْتُهُ يَخْطُبُ عَلَى مِنْبَرِ الْبَصْرَةِ وَهُوَ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «يَا مَعْشَرَ الشَّبَابِ، اتَّقُوا الشَّبَابَ، فَإِنَّمَا الشَّبَابُ جُنُونٌ»مسند الروياني):
 “வாலிபம் ஒருவகையான பைத்தியம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இது பலம் குறைந்த ஹதீஸ்தான் என்றாலும் அதன் கருத்தை நிதர்சனமாக நாம் பார்க்கிறோம்.
  
பெண் மீது பைத்தியம், பொன்மீது பைத்தியம், ஆடையின் மீது பைத்தியம், மொபைல் மீது பைத்தியம், பைக், கார் மீது பைத்தியம் இயக்கவெறி பைத்தியம்,  என இளைஞர்களை பலவகையிலும் பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது.

v அறிவை முழுவதுமாக அடமானம் வைத்து, மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கியவர்கள் ஒருபுறமென்றால், அறிவுக்கே அடிமையாகிப்போனவர்கள் இன்னொரு புறம்.
v குர்ஆன், ஹதீஸ் கூறும் உபதேசங்களை உள்ளபடி புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிவசப்படுபவர்கள் ஒருபுறமென்றால், உண்மையற்ற  உளரல்களையும் வேதவாக்காக உயர்த்திப்பிடிப்போர் மறுபுறம்.
v கூத்தாடிகளின் அசைவுக்கேற்ப ஆடுபவர்கள் ஒருபுறமென்றால், உலமாக்களையும் உமராக்களையும் உதறி தள்ளி தடம் புரண்டோர் இன்னொரு புறம். 
v பெற்றோர்கள், பெரியவர்கள்[?] சொன்னால், ஹராமையும் ஹலாலாக்க காத்திருக்கும் காவாலி கூட்டம் ஒருபுறமென்றால், என் இயக்கத்தலைவன் ஒருவனிருக்க எவன் சொல்லையும் ஏற்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அடாவடிக்கூட்டம் மறுபுறம்.
இத்தகைய காலச்சூழலில் வாழும் நம் இளைஞர்களை இஸ்லாமிய இலட்சிய வாதிகளாக உருவாக்குவதும் அவர்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் உயர்வு ஏற்படும் விதம் வழிநடத்துவதும் காலத்தின் அவசரத்தேவை.
கல்வி, அநீதிக்கெதிரான போராட்டம், அழைப்ப்புப்பணி, சமூக சேவை என்று மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் இளம் வயதில் பங்காற்றிய பெருமக்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டிய முஸ்லிம் இளைஞர்கள் இன்று நடந்து கொள்ளும் விதம் கவலையளிக்கிறது.
இளம் வயதிலும் கற்பொழுக்கத்தோடு வாழ வேண்டும் என்பற்கு ஹஜ்ரத் யூஸுப் அலை அவர்களின் எடுத்தக்காட்டாக கூறும் மார்க்கம்.
قالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْه [يوسف: 33] أَيْ دُخُولُ السِّجْنِ أَسْهَلُ عَلَيَّ وَأَهْوَنُ مِنَ الْوُقُوعِ فِي الْمَعْصِيَةِ، تفسير القرطبي  
அநீதிக்கு எதிராக ஒன்று பட்ட சமுசாயமாக திகழ வேண்டும் என்பதற்கு ஈமானிய கயிறால் பிணைக்க்ப்பட்ட குகை வாசிகளின் நிகழ்வை நினைவு படுத்திக்கொண்டிருக்கும் மார்க்கம்.
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُمْ بِالْحَقِّ إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى  وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَنْ نَدْعُوَ مِنْ دُونِهِ إِلَهًا لَقَدْ قُلْنَا إِذًا شَطَطًا [الكهف: 14،13]
பெரியவர்களின் ஆலோசனைப்படி தன் ஆற்றலை இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வழங்க வேண்டும் என்பதற்கு நபித்தோழர்களின் வாழ்வை கண்முன்னே நிறுத்திக்காட்டும் மார்க்கம்.
சிறப்பு மிகு குர்ஆனை முதன் முதலாக ஒன்று திரட்டி நூல் வடிவில் தொகுப்பது பற்றி நடந்த ஆலோசனை பிறகு அது விஷயத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமை, வாலிபர்களுக்கும் பெரியவர்களுக்கும் எத்த்தனை படிப்பினைகளை தந்து கொண்டிருக்கிறது.
4679 عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ - وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الوَحْيَ - قَالَ: أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ اليَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ عُمَرَ أَتَانِي، فَقَالَ: إِنَّ القَتْلَ قَدْ اسْتَحَرَّ يَوْمَ اليَمَامَةِ بِالنَّاسِ، وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ القَتْلُ بِالقُرَّاءِ فِي المَوَاطِنِ، فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ القُرْآنِ إِلَّا أَنْ تَجْمَعُوهُ، وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ القُرْآنَ "، قَالَ أَبُو بَكْرٍ: قُلْتُ لِعُمَرَ: «كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقَالَ عُمَرُ: هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي، وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ، قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ: وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لاَ يَتَكَلَّمُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ، وَلاَ نَتَّهِمُكَ، «كُنْتَ تَكْتُبُ الوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، فَتَتَبَّعِ القُرْآنَ فَاجْمَعْهُ، فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنَ الجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ القُرْآنِ، قُلْتُ: «كَيْفَ تَفْعَلاَنِ شَيْئًا لَمْ يَفْعَلْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقَالَ أَبُو بَكْرٍ: هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ،۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ صحيح البخاري
ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார். 
யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்: 
உமர் அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் ஒன்று திரட்டாமல் விட்டால், அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டு இழந்து) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். 
(
பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள். 
அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன்............................................................ நூல்: ஸஹீஹுல் புஹாரி 4679. 

முஸ்லிம் இளைஞர்களுக்கு முன் இருக்கும் அச்சுறுத்தல்களும்  சவால்களும்
1. போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல்:-
இன்றைய இளைஞர்களில் அதிகமானவர்கள் சூழல் தாக்கத்தின் காரணமாக விஸ்கி, பியர், ஹெரோயின், கஞ்சா, அபின், பீடா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களை உபயோகிக்க பழகுகின்றனர்..
இன்று புதிய புதிய பெயர்களில் போதைப் பொருட்கள், விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு இளைஞர்கள் அடிமையாகி தமது நிரந்தர இருப்பிடமாக நரகத்தை தெரிவு செய்துகொள்கின்றனர்.
2. சம வயதுக் குழுக்களின் தாக்கம்:-
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ» سنن أبي داود
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்  'ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும்.' அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்: அபூதாவூது).
ஒருவர் தான் யாருடன் பழகுகின்றேன் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தீய நண்பர்களின் தூண்டுதலே எமது நெறிபிறழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. இதனை நபியவர்கள் விளக்கி பின்வருமாறு கூறினார்கள்.
عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَالجَلِيسِ السَّوْءِ، كَمَثَلِ صَاحِبِ المِسْكِ وَكِيرِ الحَدَّادِ، لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ المِسْكِ إِمَّا تَشْتَرِيهِ، أَوْ تَجِدُ رِيحَهُ، وَكِيرُ الحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ، أَوْ ثَوْبَكَ، أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً» صحيح البخاري
             இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து இரண்டிலொன்று உமக்கு உறுதியாக கிடைக்கும். (1) நீர் அதை விலைக்கு வாங்கலாம்: (2) அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!" 
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 2101
3.  கலாச்சார சீரழிவிற்கு விதை தூவும் திரைப்படங்களைப் பார்த்தல்:-
இன்று அதிகமான இளைஞர்களின் நேரங்கள் சினிமாக்களினால் வீணடிக்கப்படுகின்றன. ஓய்வு என்பது அல்லாஹ் எமக்கு அருளிய அருளாகும். அதனை இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். இன்றைய ஆய்வுகளின்படி ஒரு மாணவன் வாரத்தின் பாடசாலை நாட்களாகிய திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் 36 மணிகள் தொலைக்காட்சியில் செலவழிப்பதாகவும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் இது இரு மடங்காக அதிகரிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் சினிமாக்களை பார்ப்பதுடன் நின்றுவிடாமல் அங்கு வரும் நடிகர்கள், நடிகைகள் போன்று நடை, உடை, பாவனைகளை அமைத்துக் கொள்வதும் எமது ஈமானையும் இஸ்ஸலாமிய பற்றுதலையும் பாதிக்கிறது என்பது பேரபத்தான ஒன்றல்லவா? 
4. பாடல்களையும் இசைகளையும் செவிமெடுத்தல்:-
பெரும்பாலான இளைஞர்கள் தமது கைகளில் உள்ள கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி விரசமான பாடல்களை வீதி ஓரங்களிலும், தூக்கத்தின் முன்னரும் கேட்டு மகிழ்கின்றனர். இவை உண்மையில் எமது ஈமானை பறித்துவிடும். எவ்வாறு பாலைவன மணலில் நீரை ஊற்றுகின்ற போது மிக வேகமாக உறிஞ்சி எடுப்பது போன்று இசையானது எமது ஈமானை உறிஞ்சி எடுத்துவிடும்.
5. கையடக்க தொலைபேசிகளை தவறாக பயன்படுத்தல்:-
இன்று கையடக்க தொலைபேசிகள் அவசியமான தொடர்புக்கு உதவியாக இருக்கும் அதே நேரத்தில் பல இளைஞர்களின் ஈமானிய உணர்வை அது சீரழித்துக் கொண்டிருக்கின்றது. அதில் திரைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர். ஷைத்தானின் ஓசைகள் இளைஞர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
வீதி ஓரங்களில் சென்று கொண்டிருக்கின்ற வயது பெண்களை படம் எடுத்துக் கொள்கின்றனர். பெண்கள் இருக்கின்ற வீடுகளுக்கு அழைப்புகளை கொடுத்து தொல்லைப்படுத்துகின்றனர். இவை அனைத்தும் நரகத்தின் வேதனைக்கே எம்மைக் கொண்டு சேர்க்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
6. இணையத்தளங்களுடன் தொடர்பு கொண்டு மோசமான விஷயங்களை கண்டுகளித்தல்:-
இணையத்தளங்களை தவறாக பயன்படுத்தி பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய படங்கள், காட்சிகளை பார்த்து ரசிக்கின்றனர். இதன் மூலமும் அல்லாஹ்வுடனான எமது நெருக்கம் துண்டிக்கப்படுகின்றது.
அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடப்பதுடன், விலக்கியவற்றை தவிர்ந்து வாழ வேண்டும். அதற்காக இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவை பெற்று, அல்லாஹ்வினால் அமானிதமாக அருளப்பட்ட இவ்வுலக வாழ்கையை, இளமை பருவத்தை அல்லாஹ், இரசூலின் வழிகாட்டலுக்கேற்ப பெரியவர்கள் சொல் கேட்டு இவ்வுலகிலும் மறுஉலகிலும் வெற்றிபெறுவதற்க்கு முயற்சிக்க வேண்டும் .

பொதுவாகவே அறிவுரை கூறுவதையும் கண்டிப்பு செய்வதையும் இன்றைய இளைய தலைமுறை விரும்புவதே இல்லை. ஆனால் உளி படாத கற்கள் சிற்பமாகுவதில்லை. பட்டை தீட்டாத வைரங்கள் ஜொலிப்பதில்லை. என்பதை நினைவில் நிறுத்துவோம்!

2 கருத்துகள்: