புதன், 11 நவம்பர், 2015

இஸ்லாமிய பார்வையில் நல்ல சகுனம் கெட்ட சகுனம்

بسم الله الرحمن الرحيم





இஸ்லாமிய பார்வையில்
நல்ல சகுனம் கெட்ட சகுனம்



فَإِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوا لَنَا هَذِهِ وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَى وَمَنْ مَعَهُ أَلَا إِنَّمَا طَائِرُهُمْ عِنْدَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ الأعراف: 131

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ» صحيح البخاري 5757
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளுள் சகுன நம்பிக்கையும் ஒன்று. இதனால் ஏற்படும் பாதிப்புகள்கேடுகள்இழப்புகள் ஏராளம்.
நம்மில் அதிகமானோர் சகுனம் பார்ப்பவராக இருக்கின்றனர். மெத்த படித்த அறிவாளிகள் என்று காடிடக்கொள்ளும் நபர்களும் இதில் விதி விலக்கல்ல.
பாமரர் முதல் பட்டதாரி வரை, காட்டுப்புறவாசிகள் முதல் நாட்டுப்புறவாசிகள் வரை, அறிவீனர்கள் முதல் அறிவாள்கள் வரை, விபரமில்லாதவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை வேறுபாடின்றி சகுன பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பவர்களால் தயாரிக்கப்படும்
ஏவுகணை விண்ணில் செலுத்துவதும்கூட அர்ச்சனைகள், ஆராத்திகள், நேர சகுனமெல்லாம் முடிந்த பிறகுதான் நடக்கிறதென்றால் நாம் எத்தகைய சமூக சூழலில் வாழ்கிறோம் என்று சிந்திக்க வைக்கிறது.

எனவே எமது சமூகத்தின் நன்மை கருதி சகுனத்தின் உண்மை நிலைப்பாட்டையும்அதனால் ஏற்படும் தீமைகளையும் உங்கள் முன் வைக்கின்றோம்.

சகுனம்’ என்பதற்கு அரபியில் ‘ததய்யுர்’ எனப்படும். இது ‘தய்ர்’ எனும் பெயர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். பறவைக்கு அரபியில் ‘தய்ர்’ என்பர்.
இதற்கான காரணத்தை இமாம் இப்னு ஹஜர் )ரஹ் (அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை சுபசகுனமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும்அது இடப்புறம் பறந்தால் அது அபசகுனம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். எனவே அக்காலத்தில் பறவையை வைத்து சகுனம் பார்த்ததால் ‘ததய்யுர்’ என சகுனத்திற்கு பெயர் வந்தது.
இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுனமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள்.
வெளியே ஒரு காரியமாகச் செல்லும்போது நல்ல நேரம் பார்க்கப் படும். கிழக்கு நோக்கி சில அடிகளாவது வைக்க வேண்டும்எதிரே நல்ல சம்பவம் நடக்க வேண்டும்.
இது போல் பல்லி சகுனம்கழுதை சகுனம்,  தும்மல் சகுனம்கனவு சகுனம்நிற சகுனம் எனப் பட்டியல் நீளும்வெளியே செல்லும்போது வாயிற் படியில் இடித்துக் கொண்டால் கொஞ்சம் அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு அதன் பிறகே செல்வர். எதிரே விதவை வந்தால் நினைத்தக் காரியம் நடக்காது என்று திரும்பி விடுவர்.

சகுனத்தின் விஷயத்தில் இஸ்லாம் ஒரு தெளிவான வழிமுறையை கொண்டிருக்கிறது.
இந்த உலகில் நடைபெறும் நல்ல, கெட்ட அனைத்து விஷயங்களும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நடக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட மார்க்கம் இஸ்லாம். எனவே இஸ்லாத்தில் மூட நம்பிக்கைக்கு எள் முனையளவும் இடமில்லை.

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ وَإِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِ اللَّهِ وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِكَ قُلْ كُلٌّ مِنْ عِنْدِ اللَّهِ فَمَالِ هَؤُلَاءِ الْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ 
حَدِيثًا [النساء: 78]


فَإِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوا لَنَا هَذِهِ وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَى وَمَنْ مَعَهُ أَلَا إِنَّمَا طَائِرُهُمْ عِنْدَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ الأعراف: 131

சுப சகுனம்’  ‘அப சகுனம்’ என  ‘சகுனம்’ இரு 
வகைப்படும்.


இறைநம்பிக்கையை கெடுக்கும் என்பதால் அப சகுனம் கூடாது.
தடுக்கப்பட்ட அப சகுன சிந்தனை ஒருவருக்கு வந்தால், அது இறைநம்பிக்கையை பாதிக்கும்.
எனவேதான் அவர் முன்னெடுத்த காரியத்தை நிறுத்தாமல் கீழ் காணும் துஆவை ஓதும்படி பணித்தார்கள் நபி (ஸல்அவர்கள்.

عَنْ عُرْوَةَ بْنِ عَامِرٍ، قَالَ: أَحْمَدُ: الْقُرَشِيُّ، قَالَ: ذُكِرَتِ الطِّيَرَةُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَحْسَنُهَا الْفَأْلُ وَلَا  تَرُدُّ مُسْلِمًا، فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُلِ اللَّهُمَّ لَا يَأْتِي بِالْحَسَنَاتِ إِلَّا أَنْتَ، وَلَا يَدْفَعُ السَّيِّئَاتِ إِلَّا أَنْتَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِكَ» سنن أبي داود
இறைவா! உன்னைத் தவிர வேறுயாரும் நன்மைகளைத் தரமுடியாது. உன்னைத் தவிர வேறு யாரும் தீமைகளைப் போக்கவும் முடியாது. உன் உதவியின்றி  )நன்மைக்கானஎந்த சக்தியும் இல்லை. )பாவத்திலிருந்து( தப்பிக்கும் வழியும் இல்லை۔
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ رَدَّتْهُ الطِّيَرَةُ مِنْ حَاجَةٍ، فَقَدْ أَشْرَكَ "، قَالُوا : يَا رَسُولَ اللهِ، مَا كَفَّارَةُ ذَلِكَ؟ قَالَ: " أَنْ يَقُولَ أَحَدُهُمْ: اللهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا طَيْرَ إِلَّا طَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ " مسند أحمد
சகுனம் பார்ப்பது ஒருவரை தன் தேவையில் முன்னேறி செல்ல விடாமல் தடுக்குமானால் அவர் இணை வைத்தவராகி விடுவார். என்று நபி (ஸல்அவர்கள் கூறிய போது, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (ஒருவருக்கு அப்படி மனதில் தோன்றினால்அதன் பரிகாரம் என்ன?” என்று ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு பின் வரும் துஆவை ஓதும்படி நபி (ஸல்கூறினார்கள்.
இறைவா! உன நலவைத் தவிர வேறு நலவு கிடையாது. உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் கிடையாது. உன்னைத் தவிர வேறு நாயனில்லை’. (நூல்: அஹ்மத்)
காலம் நேரங்களின் அடிப்படையில் சகுனம் பார்த்த மக்களிடம் பூமான் நபி செய்த புரட்சி...

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ» صحيح البخاري 5757
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. 'ஸஃபர்மாதம் பீடை என்பதும் கிடையாது. 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நூல்ஸஹீஹுல் புஹாரி 5757



ஸஃபர் மாதம் பற்றிய தவறான புரிதல்


فتخصيص الشؤم بزمان دون زمان كصفر او غيره غير صحيح وانما الزمان كله خلق الله تعالى وفيه تقع اعمال بنى آدم فكل زمان اشتغل فيه المؤمن بطاعة الله فهو زمان مبارك عليه وكل زمان اشتغل فيه بمعصية الله فهو مشئوم عليه فالشؤم فى الحقيقة هو المعصية كما قال ابن مسعود رضى الله عنه ان كان الشؤم فى شىء ففيما بين اللحيين يعنى اللسان روح البيان

சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு சரியான புரிதலைத் தந்த பெருமானார்...

உலக வரலாற்றில் அதுவரை அப்படி ஒரு திருமணம் நடந்ததில்லை அதற்குப்பிறகு நடக்கப்போவதுமில்லை அவ்வளவு சிறப்பு வாய்ந்த திருமணம் நடந்தது ஸஃபர் மாதத்தில் என்று ஒரு பதிவு கூறுகிறது.

فَكَانَتْ زَيْنَبُ تَفْخَرُ عَلَى نِسَائِهِ وَتَقُولُ: زَوَّجَكُنَّ أَهْلُوكُنَّ، وَزَوَّجَنِي اللَّهُ مِنَ السَّمَاءِ. الكامل في التاريخ
تزوج رسول االله صلى االله عليه وسلم زينب بنت جحش في شهر صفر من السنة الخامسة " (محمد رسول الله محمد رضا)
நபி ஸல் அவர்களின் முதல் திருமணம் நடந்த்தும் ஸஃபர் மாதத்தில் என்று ஒரு பதிவு கூறுகிறது.

وقد كان في شهر صفر زواج السيدة خديجة بنت خويلد - رضي الله عنها - من النبي محمد - صلى الله عليه وسلم - عقب خمسة وعشرين يوماً من صفر"، سبل الهدى والرشاد (2/165).
புதிதாக திருமணமானவர்களை வாழ்த்தி துஆ செய்யும்போது, அலி - ஃபாத்திமா போல என்று நாம் கூறுவோமோ அந்த தம்பதிகளின் திருமணம் நடந்தது ஸஃபர் மாதத்தில் என்று ஒரு பதிவு கூறுகிறது.

ووقع زواج علي بن أبي طالب - رضي الله عنه - من السيدة فاطمة - رضي الله عنها - في صفر كما قال ابن كثير: "وأما فاطمة - رضي الله عنها - فتزوجها ابن عمها علي بن أبى طالب - رضي الله عنه - في صفر سنة اثنتين، فولدت له الحسن والحسين، ويقال ومحسن، وولدت له أم كلثوم وزينب"
السيرة النبوية لابن كثير (4/611).

அரபக மக்கள் பீடையாக கருதிய இன்னொரு மாதம் ஷவ்வாலில்தான் ஆயிஷா ரலி அவர்களுடன் நபி ஸல் அவர்களின் திருமணம் நடந்தது.

كذلك تشاؤم أهل الجاهلية بشوال في النكاح فيه خاصة وقد قيل: إن أصله أن طاعونا وقع في شوال في سنة من السنين فمات فيه كثير من العرائس فتشائم بذلك أهل الجاهلية وقد ورد الشرع بإبطاله  لطائف المعارف لابن رجب

عَنْ عَائِشَةَ، قَالَتْ: «تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ، وَأُدْخِلْتُ عَلَيْهِ فِي شَوَّالٍ، فَأَيُّ نِسَائِهِ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي؟» سنن النسائي

இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் வெற்றித்திருப்புமுனையாக அமைந்த ஹிஜ்ரத் பயணம் துவங்கியது ஸஃபர் மாதத்தில்தான்.

فقد رجح المباركفوري في الرحيق المختوم تبعا لما رواه ابن اسحاق أن الرسول صلى الله عليه وسلم خرج من بيته في ليلة الجمعة بتاريخ سبع وعشرين من صفر من السنة الرابعة عشر بعد البعثة

இறையருளின் மீது ஆதரவைத்தரும் சுப சகுனம் (வரம்புக்குட்பட்டுஅனுமதி.
அது பற்றிய ஹதீஸ்கள்


عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ طِيَرَةَ، وَخَيْرُهَا الفَأْلُ» قَالُوا: وَمَا الفَأْلُ؟ قَالَ: «الكَلِمَةُ الصَّالِحَةُ يَسْمَعُهَا أَحَدُكُمْ» صحيح البخاري 5754

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பதென்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்அபூ ஹுரைரா(ரலிநூல்ஸஹீஹுல் புஹாரி  5754.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا عَدْوَى وَلَا طِيَرَةَ، وَيُعْجِبُنِي الفَأْلُ الصَّالِحُ: الكَلِمَةُ الحَسَنَةُ "صحيح البخاري 5756
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. நற்குறி எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கும். நல்ல (மங்கலகரமான) சொல் தான் அது. 
என அனஸ்(ரலி) அறிவித்தார். நூல்ஸஹீஹுல் புஹாரி 5756.


عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَتَفَاءَلُ وَلا يَتَطَيَّرُ، وَيُعْجِبُهُ الاسْمُ الْحَسَنُ "مسند أحمد
عَنْ أَبِي حَدْرَدٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَسُوقُ إِبِلَنَا هَذِهِ؟» أَوْ قَالَ: «مَنْ يُبَلِّغُ إِبِلَنَا هَذِهِ؟» قَالَ رَجُلٌ: أَنَا، فَقَالَ: «مَا اسْمُكَ؟» قَالَ: فُلَانٌ، قَالَ: «اجْلِسْ» ، ثُمَّ قَامَ آخَرُ، فَقَالَ: «مَا اسْمُكَ؟» قَالَ: فُلَانٌ، فقَالَ: «اجْلِسْ» ، ثُمَّ قَامَ آخَرُ، فَقَالَ: «مَا اسْمُكَ؟» قَالَ: نَاجِيَةُ، قَالَ: «أَنْتَ لَهَا، فَسُقْهَا» الأدب المفرد
وَعَنْ بُرَيْدَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَتَطَيَّرُ مِنْ شَيْءٍ فَإِذَا بَعَثَ عَامِلًا سَأَلَ عَنِ اسْمِهِ فَإِذَا أَعْجَبَهُ اسْمه فَرح بِهِ ورئي بشر ذَلِك على وَجْهِهِ وَإِنْ كَرِهَ اسْمَهُ رُئِيَ كَرَاهِيَةُ ذَلِكَ على وَجْهِهِ وَإِذَا دَخَلَ قَرْيَةً سَأَلَ عَنِ اسْمِهَا فَإِنْ أَعْجَبَهُ اسْمُهَا فَرِحَ بِهِ وَرُئِيَ بِشْرُ ذَلِكَ فِي وَجْهِهِ وَإِنْ كَرِهَ اسْمَهَا رُئِيَ كَرَاهِيَة ذَلِك فِي وَجهه. رَوَاهُ أَبُو دَاوُد
நல்ல பொருளுள்ள பெயர்கள் வார்த்தைகளைக் கேட்டு தான் முன்னெடுக்கும் காரியத்தை நல்ல முறையில் அல்லாஹ் கைகூடச்செய்வான் என்பதற்கான அறிகுறியாக விளங்குவதில் தவறேதுமில்லை அது நபி வழியும் கூட.
عَنْ عِكْرِمَةَ , أَنَّهُ لَمَّا جَاءَ سُهَيْلٌ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَدْ سُهِّلَ لَكُمْ أَمْرُكُمْ ". السنن الكبرى للبيهقي
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ إِذَا خَرَجَ لِحَاجَتِهِ أَنْ يَسْمَعَ: يَا رَاشِدُ، يَا نَجِيحُ " سنن الترمذي
எவைகளை நல்ல அறிகுறியாக புரிந்து கொள்ளலாம் என்பதற்கு பெருமக்கள் கூறிய உதாரணங்கள்.
وَرُوِّينَا عَنِ الْأَصْمَعِيِّ أَنَّهُ سُئِلَ عَنِ الْكَلِمَةِ الصَّالِحَةِ؟ فَقَالَ: «الرَّجُلُ يَضِلُّ لَهُ الشَّيْءُ فَيَذْهَبُ فَيَسْمَعُ يَا وَاجِدُ» الآداب للبيهقي
كَطَالِبِ ضَالَّةٍ يَا وَاجِدٌ، وَكَتَاجِرٍ يَا رَزَاقٌ، وَكَمُسَافِرٍ يَا سَالِمٌ، وَكَخَارِجٍ لِحَاجَةٍ يَا نَجِيحٌ، وَكَغَازٍ يَا مَنْصُورٌ، وَكَحَاجٍّ يَا مَبْرُورٌ، وَكَزَائِرٍ يَا مَقْبُولٌ، وَأَمْثَالُ ذَلِكَ. مرقاة المفاتيح شرح مشكاة المصابيح

الجمع والترتيب – محمد يوسف الداودي
ودكري


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக