வெள்ளி, 4 டிசம்பர், 2015

இஸ்லாத்தின் தனித்தன்மை

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யா பிரிக்ஃபீல்ட்ஸ் இந்தியன் முஸ்லிம் பள்ளிவாசலில் [4/12/2015] நடைபெற்ற குத்பா உரை.



"இஸ்லாம் என்பது இறை உத்தரவுக்கு மதிப்பளிப்பதும் படைப்புகளிடம் பரிவு காட்டுவதுமாகும்”.

ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல இஸ்லாமிய போதனைகளுக்கு இரு அமசங்கள் இருக்கிறது.
1 படைத்தாளும் இறவனின் கட்டளைக்கு பணிந்து வாழவேண்டும் என்பது.
2 படைப்புகளிடம் பரிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது

குறிப்படத்தக்க அம்சம் என்னவென்றால்......
இறைவணக்கமும் படைப்புகளுக்கு செய்யவேண்டிய அவசியமான அவசரமான சேவையும் மோதிக்கொள்ளும்போது [அதாவது ஒன்றைச்செய்தால் இன்னொன்று தவறிவிடும் என்ற நிலை ஏற்படும்போது] இறைவணக்கத்தை ஒத்தி போட்டு படைப்புகளுக்கு செய்யவேண்டிய அந்த அவசியமான அவசரமான சேவையில் கவனம் செலுத்த பணிக்கிறது இஸ்லாம்.
வணக்கம் என்ற பெயரால் மக்களுக்கு இடையூறு அளிக்க அனுமதிப்பதில்லை
மாறாக பிறருக்கு இடையூறு அளிக்காமலிருப்பதையே வணக்கம்
என்றுரைக்கிறது.


‪‎இதுபோன்ற‬ கருத்துக்களை உள்ளடக்கியது இந்த உரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக