புதன், 9 டிசம்பர், 2015

கண்ணியமாய் புண்ணியம் செய்வோம்

கண்ணியமாய் புண்ணியம் செய்வோம்

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ  [المائدة: 2]
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَأْلَفُ وَيُؤْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ» المعجم الأوسط
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து நடந்து வரும் நம் முஸ்லிம் சகோதரர்களின் சமூக சேவைகளும் மனிதநேய உதவிகளும் பலரையும் வியக்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. ]இதற்கு உதவிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!]
நீண்ட நேரம் நிலையாய் நிற்கிறார்கள், தங்கள் முதுகுகளையும் தோள்களையும் கைகளையும் ஏணியாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள், தூக்கத்தை இழக்கிறார்கள், பட்டினி கிடக்கிறார்கள், குடும்பம் உறவு நட்புகளையெல்லாம் பிரிந்திருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள் இது எப்படி அவர்களுக்கு எளிதாகிறது? என்று மூக்கில் விரல் வைத்து யோசிப்போரும் உண்டு.
இஸ்லாமை பின்பற்றும் நமக்கு இத்தகைய உதவும் உணர்வு இயல்பானதுதான், எளிதானதும்தான்.
ஏனென்றால் தினசரி ஐவேளை தொழும் நாம் தொழுகையில் நிலையாய் நின்றும், குனிந்தும், தரையில் [தலையை வைத்து ஸஜ்தாவில்] கிடந்தும் பழக்கப்பட்டவர்கள்.
நோன்பின் மூலம் வருடம் ஒருமுறை பட்டினி கிடந்து பழக்கப்பட்டவர்கள்.
ஹஜ்/உம்ராவின் மூலம் குடும்பத்தை, உறவை, நட்பை, பிரிந்திருக்கும் உணர்வையும் வளர்த்துக்கொண்டவர்கள்.
அது மட்டுல்ல பிற மனிதர்கள் பாதிப்படையும்போது அதை நம்முடைய பாதிப்பாக கருதும் பண்பாட்டை மார்க்கத்தின் வழியே படித்து வைத்திருப்பவர்கள்.
எப்படியென்றால் மனித குலம் அனைவரும் ஒரு தந்தை தாயின் பிள்ளைகள் என்ற உணர்வைத் தருகிறது.
அல்-குர்ஆனின் 7 இடங்களில் மனித குலத்தை ஆதமுடைய மக்கள் என்றே அழைக்கிறான், அடையாளப்படுத்துகிறான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அதே முறையில் 100 க்கும் அதிகமான ஹதீஸ்களில் குறிப்பட்டுள்ளார்கள்.
இஸ்லாம் வலியுறுத்தும் வணக்கங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1 இறைவனை திருப்தி படுத்தும் வணக்கம்
2 இறைவனையும் படைப்புகளையும் சந்தோஷப்படுத்தும் வணக்கம்
இரண்டுமே புண்ணியமானவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் ஒப்பீடு என்ற முறையில் பார்க்கும்போது இரண்டாவது வகை வணக்கம் சற்று கூடதலான சிறப்பை பெறுகிறது.
خدمة الصحابة لرجل يشتغل بالقرآن والصلاة
وأخرج أبو داود في مراسيله عن أبي قِلابة رضي الله عنه: أن ناساً من أصحاب النبي صلى الله عليه وسلم قدموا يُثْنون على صاحب لهم خيراً. قالوا: ما رأينا مثل فلان قط، ما كان في مسير إلا كان في قراءة، ولا نزلنا في منزل إلا كان في صلاة. قال: «فمن كان يكفيه ضيعته» - حتى ذكر -: ومن كان يعلف جمله أو دابته؟» قالوا: نحن. قالوا: «فكلّكم خير منه» . كذا في الترغيب. حياة الصحابة
அதனால்தான் இரண்டாவது வணக்கத்தில் ஈடுபடுபவர், முதலாவது வணக்கத்தின் நன்மையை பிரதிபலனாக பெற்று விடுகிறார் என்ற கருத்தை அதிகமாக காணமுடிகிறது.
ஆதரங்களின் மூலம் அதை அறியலாம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، أَوِ القَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ» صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
(
கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்'. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 5353. 
عَنْ عَائِشَةَ رَحِمَهَا اللَّهُ، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ» سنن أبي داود
காரணம்
பள்ளிக்குள் செய்யப்படும் உருக்கமான வணக்கம் பிற சமுதாயத்தின் மனதில் இஸ்லாத்தின் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் படைப்புகளிடம் நாம் வெளிப்படுத்தும் பணபாட்டு நடைமுறைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.
உதாரணமாக முஸ்லிம் ஒருவர் ரயிலில் தொழுகிறார் என்றால் அருகிலிருப்பவர்களுக்கு அவரின் மீது மரியாதை வரும் அவ்வளவுதான்.
ஆனால் அதே நபர் ரயிலில் சுமை தூக்க முடியாதவருக்கு உதவினார் அல்லது முதியவருக்கு தான் எழுந்து இடமளித்தார் அல்லது எதிரிலிருப்பவர் மறந்து விட்டுச்சென்ற உடமையை உரியவரிடம் சேர முயற்சி செய்தார் என்று வைத்துக்கொண்டால், இவை ஒவ்வொன்றும் அவருக்கு மட்டும் மரியாதை தேடித்தருவதில்லை மாறாக அவர் கடைபிடிக்கும் இஸ்லாத்திற்கும் மதிப்பை கூட்டுகிறது, இஸ்லாத்தின் பால் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது, இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் இதயத்தை தாக்குகிறது, இஸ்லாம் பற்றிய சிந்தனைக் கதவை திறக்கிறது.
இதுதான் இப்பொழுதும் நடக்கிறது. இதற்கு முன்னும் நடந்திருக்கிறது இனியும் நடக்கவிருக்கிறது.
புது தில்லிகலீஃபா உமரின் ஆட்சி முறை தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும், மக்களின் மேம்பாட்டுக்காக அவரது ஆட்சி முறையை முன்மாதிரியாய் கொள்வேன் எனவும் புது தில்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்தார்.
இஸ்லாமிக் இன்டர்நேஷனல் சென்டர் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கலீஃபா உமரின் ஆட்சிஎன்ற புத்தகத்தை மாணவி ஒருவர் பரிசளித்தார். புத்தகத்தை பெற்றுக்கொண்ட கேஜ்ரிவால், “கலீபா உமரின் ஆட்சி முறை தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும், மக்களின் மேம்பாட்டுக்காக அவரது ஆட்சி முறையை பின்பற்ற முனைவேன்என்றும் தெரிவித்தார்.

இந்தியத் தலைவர்கள் கலீஃபா உமர் அவர்களை புகழ்வது முதல் முறையல்ல. தேசத் தந்தை காந்தியடிகள், ” உமர் போன்ற ஓர் தலைவர் இந்திய தேசத்திற்கு தேவைஎன கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.thoothuonline.com/archives/73939#sthash.OFL3i44G.dpuf
உமர் ரலி அவர்களிடம் வணக்கமும் இருந்தது படைப்புகளுக்கு சேவை செய்யும் பழக்கமும் இருந்தது.
ஆனால் உலகம் போற்றும் உத்தமராக உமர் ரலி உயர்ந்தது எதனால்?
அவர்கள் வணக்கத்திலும் மிகச்சிறந்தவர்கள்தான்
عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ: «مَتَى تُوتِرُ؟» ، قَالَ: أُوتِرُ مِنْ أَوَّلِ اللَّيْلِ، وَقَالَ لِعُمَرَ: «مَتَى تُوتِرُ؟» ، قَالَ: آخِرَ اللَّيْلِ، فَقَالَ لِأَبِي بَكْرٍ: «أَخَذَ هَذَا بِالْحَزْمِ» ، وَقَالَ لِعُمَرَ: «أَخَذَ هَذَا بِالْقُوَّةِ» سنن أبي داود
عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: مَتَى كَانَ يُوتِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: «كُلَّ ذَلِكَ قَدْ فَعَلَ، أَوْتَرَ أَوَّلَ اللَّيْلِ، وَوَسَطَهُ، وَآخِرَهُ، وَلَكِنِ انْتَهَى وِتْرُهُ حِينَ مَاتَ إِلَى السَّحَرِ» سنن أبي داود
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا» سنن أبي داود
 ஆனால் உலகம் வியக்கும் அவர்களின் உயர்வுக்கு காரணம் அவர்களிடமிருந்த பணிவு
وقال أبو عمر: روينا من وجوه عن عمر بن الخطاب أنه خرج ومعه الناس، فمرّ بعجوز فاستوقفته فوقف، فجعل يحدّثها وتحدثه، فقال له رجل: يا أمير المؤمنين، حبست الناس على هذه العجوز. فقال: ويلك! أتدري من هي؟ هذه امرأة سمع اللَّه شكواها من فوق سبع سماوات، هذه خولة بنت ثعلبة التي أنزل اللَّه فيها: قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجادِلُكَ فِي زَوْجِها وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحاوُرَكُما ... [المجادلة 1] الآيات، [واللَّه لو أنها وقفت إلى الليل] ما فارقتها إلا للصلاة ثم أرجع إليها. الإصابة في تمييز الصحابة (8 / 115
அவர்களிடமிருந்த எளிமை
அந்தப் பேரரசர் பாலஸ்தீனத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக அவர் பாலஸ்தீனுக்குள் நுழைந்த அழகுக் காட்சியை சொல்லிச் சொல்லி நெகிழாத வரலாற்றாசிரியர்களே இல்லை.
ஒரே ஒரு பணியாளரை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்ட உமர் பாலஸ்தீனத்திற்கு நுழைந்த போது உமர் ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு வந்தார்.

عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ: خَرَجَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى الشَّامِ وَمَعَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ فَأَتَوْا عَلَى مَخَاضَةٍ وَعُمَرُ عَلَى نَاقَةٍ لَهُ فَنَزَلَ عَنْهَا وَخَلَعَ خُفَّيْهِ فَوَضَعَهُمَا عَلَى عَاتِقِهِ، وَأَخَذَ بِزِمَامِ نَاقَتِهِ فَخَاضَ بِهَا الْمَخَاضَةَ، فَقَالَ أَبُو عُبَيْدَةَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَنْتَ تَفْعَلُ هَذَا، تَخْلَعُ خُفَّيْكَ وَتَضَعُهُمَا عَلَى عَاتِقِكَ، وَتَأْخُذُ بِزِمَامِ نَاقَتِكَ، وَتَخُوضُ بِهَا الْمَخَاضَةَ؟ مَا يَسُرُّنِي أَنَّ أَهْلَ الْبَلَدِ اسْتَشْرَفُوكَ، فَقَالَ عُمَرُ: «أَوَّهْ لَمْ يَقُلْ ذَا غَيْرُكَ أَبَا عُبَيْدَةَ جَعَلْتُهُ نَكَالًا لَأُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّا كُنَّا أَذَلَّ قَوْمٍ فَأَعَزَّنَا اللَّهُ بِالْإِسْلَامِ فَمَهْمَا نَطْلُبُ الْعِزَّةَ بِغَيْرِ مَا أَعَزَّنَا اللَّهُ بِهِ أَذَلَّنَا اللَّهُ» المستدرك على الصحيحين للحاكم
அவர்களிடமிருந்த நேர்மை
عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ: خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَحِمَهُ اللَّهُ إِلَى حَرَّةِ وَاقِمٍ، حَتَّى إِذَا كُنَّا بِصِرَارٍ، إِذَا نَارٌ تُؤَرَّثُ، فَقَالَ: يَا أَسْلَمُ، إِنِّي أَرَى هَؤُلاءِ رُكْبًا قَصُرَ بِهِمُ اللَّيْلُ وَالْبَرْدُ، انْطَلِقْ بِنَا، فَخَرَجْنَا نُهَرْوِلُ حَتَّى دَنَوْنَا مِنْهُمْ، فَإِذَا امْرَأَةٌ مَعَهَا صِبْيَانٌ لَهَا، وَقِدْرٌ مَنْصُوبَةٌ عَلَى النَّارِ، وَصِبْيَانُهَا يَتَضَاغَوْنَ، فَقَالَ عُمَرُ:
السَّلامُ عَلَيْكُمْ يَا أَصْحَابَ الضَّوْءِ- وَكَرِهَ أَنْ يَقُولَ: يَا أَصْحَابَ النَّارِ- قَالَتْ: وَعَلَيْكَ السَّلامُ، قَالَ: أَأَدْنُو؟ قَالَتِ: ادْنُ بِخَيْرٍ أَوْ دَعْ، فَدَنَا فَقَالَ: مَا بَالُكُمْ؟ قَالَتْ: قَصُرَ بِنَا اللَّيْلُ وَالْبَرْدُ، قَالَ: فَمَا بَالُ هَؤُلاءِ الصِّبْيَةِ يَتَضَاغَوْنَ؟ قَالَتِ: الْجُوعُ، قَالَ: وَأَيُّ شَيْءٍ فِي هَذِهِ الْقِدْرِ؟ قَالَتْ:
مَاءٌ أُسْكِتُهُمْ بِهِ حَتَّى يَنَامُوا، اللَّهُ بَيْنَنَا وَبَيْنَ عُمَرَ! قَالَ: أَيْ رَحِمَكِ اللَّهُ، مَا يُدْرِي عُمَرَ بِكُمْ! قَالَتْ: يَتَوَلَّى أَمْرَنَا وَيَغْفَلُ عَنَّا! فَأَقْبَلَ عَلَيَّ، فَقَالَ:
انْطَلِقْ بِنَا، فَخَرَجْنَا نُهَرْوِلُ، حَتَّى أَتَيْنَا دَارَ الدَّقِيقِ، فَأَخْرَجَ عِدْلا فِيهِ كبه شحم، فقال: احمله على، فقلت: أَنَا أَحْمِلُهُ عَنْكَ، قَالَ: احْمِلْهُ عَلَيَّ، مَرَّتَيْنِ أَوْ ثَلاثًا، كُلُّ ذَلِكَ أَقُولُ: أَنَا أَحْمِلُهُ عَنْكَ، فَقَالَ لِي فِي آخِرِ ذَلِكَ: أَنْتَ تَحْمِلُ عَنِّي وِزْرِي يَوْمَ الْقِيَامَةِ، لا أُمَّ لَكَ! فَحَمَلْتُهُ عَلَيْهِ، فَانْطَلَقَ وَانْطَلَقْتُ مَعَهُ نُهَرْوِلُ، حَتَّى انْتَهَيْنَا إِلَيْهَا، فَأَلْقَى ذَلِكَ عِنْدَهَا، وَأَخْرَجَ مِنَ الدَّقِيقِ شَيْئًا، فَجَعَلَ يَقُولُ لَهَا: ذُرِّي عَلَيَّ، وَأَنَا أُحَرِّكُ لَكِ، وَجَعَلَ يَنْفُخُ تَحْتَ الْقِدْرِ- وَكَانَ ذَا لِحْيَةٍ عَظِيمَةٍ- فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى الدُّخَانِ مِنْ خِلَلِ لِحْيَتِهِ حَتَّى أَنْضَجَ وَأَدِمَ الْقِدْرُ ثُمَّ أَنْزَلَهَا، وَقَالَ: ابْغِنِي شَيْئًا، فَأَتَتْهُ بِصَحْفَةٍ فَأَفْرَغَهَا فِيهَا، ثُمَّ جَعَلَ يَقُولُ: أَطْعِمِيهِمْ، وَأَنَا أَسْطَحُ لَكِ، فَلَمْ يَزَلْ حَتَّى شَبِعُوا، ثُمَّ خَلَّى عِنْدَهَا فَضْلَ ذَلِكَ، وَقَامَ وَقُمْتُ مَعَهُ، فَجَعَلَتْ تَقُولُ: جَزَاكَ اللَّهُ خَيْرًا! أَنْتَ أَوْلَى بِهَذَا الأَمْرِ مِنْ أَمِيرِ الْمُؤْمِنِينَ! فَيَقُولُ:
قُولِي خَيْرًا، إِنَّكِ إِذَا جِئْتِ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَجَدْتِنِي هُنَاكَ إِنْ شَاءَ اللَّهُ ثُمَّ تَنَحَّى نَاحِيَةً عَنْهَا، ثُمَّ اسْتَقْبَلَهَا وَرَبَضَ مَرْبَضَ السَّبُعِ، فَجَعَلْتُ أَقُولُ لَهُ:
إِنَّ لَكَ شَأْنًا غَيْرَ هَذَا، وَهُوَ لا يُكَلِّمُنِي حَتَّى رَأَيْتُ الصِّبْيَةَ يَصْطَرِعُونَ وَيَضْحَكُونَ ثُمَّ نَامُوا وَهَدَءُوا، فَقَامَ وَهُوَ يَحْمَدُ اللَّهَ، ثُمَّ أَقْبَلَ عَلَيَّ فَقَالَ: يَا أَسْلَمُ، إِنَّ الْجُوعَ أَسْهَرَهُمْ وَأَبْكَاهُمْ، فَأَحْبَبْتُ أَلا أَنْصَرِفَ حَتَّى أَرَى مَا رَأَيْتُ مِنْهُمْ. تاريخ الطبري
கலீஃபா உமர் (ரலி)
கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலீஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.
கலீஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலீஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.
உமர் (ரலி): குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்
உமர் (ரலி): அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலீஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.
அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலீஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.
முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.
கலீஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, [ஸ்டிக்கர் ஏதும் இல்லாமலே] அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.
அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!
அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலீஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.
குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலீஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையாஎன வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலீஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!
உமர் (ரலி) அவர்களும் தாம் இன்னார்என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலீஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்என்றார்கள்.
கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம்! நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான். தபரீ

படைப்புகளுக்கு செய்யும் சேவையால் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் அன்பும் இணைப்பும் கிடைக்கிறது.
إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ  [النحل: 128]
6005 سَهْلَ بْنَ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَنَا وَكَافِلُ اليَتِيمِ فِي الجَنَّةِ هَكَذَا» وَقَالَ بِإِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالوُسْطَى صحيح البخاري
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் 
'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்' என்று கூறியபடி நபி(ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி(ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 6005. 

முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மை செய்பவராக இருக்கவேண்டும்.
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ  [المائدة: 2]
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَأْلَفُ وَيُؤْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ» المعجم الأوسط
 5444 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ إِذَا أُتِيَ بِجُمَّارِ نَخْلَةٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنَ الشَّجَرِ لَمَا بَرَكَتُهُ كَبَرَكَةِ المُسْلِمِ» فَظَنَنْتُ أَنَّهُ يَعْنِي النَّخْلَةَ، فَأَرَدْتُ أَنْ أَقُولَ: هِيَ النَّخْلَةُ يَا رَسُولَ اللَّهِ، ثُمَّ التَفَتُّ فَإِذَا أَنَا عَاشِرُ عَشَرَةٍ أَنَا أَحْدَثُهُمْ فَسَكَتُّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ النَّخْلَةُ» صحيح البخاري
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் 
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மரங்களில் ஒன்று உண்டு. அதன் வளம் முஸ்லிமுக்குள்ள வளத்தைப் போன்றதாகும்' என்று கூறினார்கள். உடனே நான், 'அவர்கள் பேரீச்ச மரத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள்' என்று நினைத்தேன். எனவே, நான் 'அது பேரீச்சம் மரம் தான், இறைத்தூதர் அவர்களே!' என்று கூற விரும்பினேன். பிறகு (என்னுடனிருப்பவர்களைத்) திரும்பிப் பார்த்தேன். (அங்கிருந்த) பத்து பேரில் நான் பத்தாமவனாக, அவர்கள் அனைவரிலும் இளம் வயதுடையவனாக இருந்தேன். எனவே, மெளனமாம்விட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களே, 'அது பேரீச்ச மரம் தான்' என்று கூறினார்கள். . நூல்: ஸஹீஹுல் புஹாரி 5444. 
عَنْ أَبِي الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَرْخَصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رُقْيَةِ الْحَيَّةِ لِبَنِي عَمْرٍو قَالَ أَبُو الزُّبَيْرِ: وَسَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ: لَدَغَتْ رَجُلًا مِنَّا عَقْرَبٌ، وَنَحْنُ جُلُوسٌ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ أَرْقِي؟ قَالَ: «مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَنْفَعَ أَخَاهُ فَلْيَفْعَلْ صحيح مسلم

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பாம்புக்கடிக்கு ஓதிப் பார்ப்பதற்கு "பனூ அம்ர்" குலத்தாருக்கு அனுமதியளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மேலும் ஜாபிர் (ரலி) அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது எங்களில் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது. அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஓதிப்பார்க்கட்டுமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடிந்தால் அவ்வாறே செய்யட்டும்" என்றார்கள் என்றும் கூறியதை நான் கேட்டேன். நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 4424. 

விளம்பரத்திற்கும் பாராட்டுக்கும் எந்த நன்மையையும் செய்ய வேண்டியதில்லை
இக்லாசுடன் செய்த சேவைகளால் வந்து குவியும் பாராட்டுகளால் தவறேதுமில்லை.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக